Wednesday 28 September 2016

இலங்கையின் சுதந்திரத்திற்காக மர்ஹூம் சேர் ராஸிக் பரீத் ஆற்றிய உரையில்

அகில இலங்கை சோனகர் சங்க்தின்| தலைவரும் அரச சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருந்தவருமான சேர் ராஸிக் பரீத் பின் வருமாறு உரையாற்றினார்.
1936ம் ஆண்டை ஞாபகமூட்ட விரும்பு கிறேன். இந்த அரச பைக்கு அன்று நடந்த பொதுத் தேர்தலில் சோனகர்கள ஒரு பிரதிநிதியையாவது அனுப்ப முடியவில்லை. தமிழ் சமூகம் 40000 சோனகர், வாக்களர் கள் இருக்கும் தொகுதிகளான மன்னார், மட்டக்களப்புத் தெற்கு, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து தமிழ்ப் பிரதிநிதி களைத்தான் அனுப்பினார்கள். இருந்தும், நாம் தமிழ் அங்கத்தினர்களை ஒன்றாகவே கருதி வந்தோம்.
இந்த நாட்டில் வாழும் ஐந்து லட்சம் சோனர்களை ஐம்பது கிளைகளைக் கொண்ட அகில இலங்கை சோனகர் சங்கம் கௌரவ தலைவருடைய இந்தத் தீர்மானத்திற்கு எமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்கிறது. எனக்கு இதைவிட இன்பம் தரக் கூடியது வேறொ ன்றுமில்லை. எனது மனப்பூர்வமான ஆதரவை கௌரவ சபைத் தலைவரின் பிரேர ணைக்கு அளிக்க விரும்பகிறேன். என்னு டைய சமூகமும் நானும் அவருக்க உறு துணையாகவே இருந்து வந்திருக்கிறோம். வெற்றி பெறும் இத்தருணத்தில் அவரோடு கை கோர்த்துக் கொண்டு டொமினியன் அந்தஸ்தை நோக்கி நாம் முன்னேறத் தயார் என்பதைக் கூற விருப்புகிறேன்||.
ஷஷசிங்கள சகோதர சகோதரிகளைப் போல் இலங்கை சோனகர்கள் இலங்கைத் தாய் நாட்டின் தவப் புதல்வர்கள் ஆவர். இத்தவத்திரு நாட்டில் கடந்த பல நூற்றாண்டுகளாக சிங்கள மக்களும் சோனகர்களும் ஒற்றுமையுட னும், பரஸ்பர அன்புடனும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் பல தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். நான் அதைப் பற்றி இப்பொழுது பேச விரும்பவில்லை. இன்றைய அறிவு யுகத்தில் எந்தப் பிரச்சி னையும் மனித சக்திக்கு அப்பாற்பட்டதல்ல. எப்பிரச்சினையும், நல்லெண்ணத்துடனும், ஒற்றுமையுடனும் நாம் அணுகினால், அதைத் தீர்க்க முடியும்.
எனவே எம்முடைய சினேக கரங் களை எமது சிங்கள சகோதரர்களுக்கு நீட்டுகிறோம்…. தமிழ்த் தலைவர்கள் 50க்கு 50 என்ற தூண்டில் மூலம் முஸ்லிம்களைப் பிடிக்க முயன்றார்கள். சிங்கள மக்களில் வைத்த நம்பிக்கையை சோனகர் இழக்க வில்லை. வெற்றி வாகை சூடும் இத்தரு ணத்தில் சிங்கள மக்களுக்க நான் இதை ஞாபக மூட்ட விரும்புகிறேன்.
தம்முடைய கோரிக்கைகளுக்கு முஸ்லிம்களின் உதவியை நாடிய தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளை உதாசீனம் செய்தது. தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் தன்னுடைய திட்டத்தில் ஷஷஇலங்கைத் தமிழர்களுக்கு 17 ஆசனங்களும், இந்தியத் தமிழர்களுக்கு 13 ஆசனங்களும் பறங்கியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் 8 ஆசனங்களும் (நியமனம்) எஞ்சியிருந்த 12 ஆசனங்களை ஏனைய எல்லா சிறுபான்மை இனமக் களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும்|| என்றார்.
(இப்பிரேரணை சம்பந்தமான கூட்டத் தில், இவ்வேற்பாட்டையறிந்த டாக்டர் கலீல் முஸ்லிம்களுக்கு ஆசனங்கள் கொடுக்கப் படல் வேண்டும் என்ற தமது கோரிக்கை யை எடுத்துரைத்ததோடு, ஷஷஎங்களை நீங் கள் என்னவென்று எண்ணினீர்கள். ஏனை யோருக்கு வழங்கும் எஞ்சியுள்ள ஆசனங் களைத்தான் நீங்கள் எங்களுக்குக் கொடு க்க வேண்டுமா?|| என்று கூறிக் கொண்டு கூட்டத்திலிருந்தும் வெளியேறினார். தமிழர்களின் இந்தப் போக்கினால் விரக் தியடைந்த முஸ்லிம்கள், சிங்களத் தலைவர் களை ஆதரிக்க முன் வந்தார்கள்.)
இதே கருத்தைத்தான் சேர் ராஸிக் பரீத் அரச சபையில் கூறும் போது
ஷஷகாங்கேசன்துறை அங்கத்தவரும், மன்னார் அங்கத்தவரும் ஆற்றிய இரங்கத் தக்க சொற்பொழிவுகளுக்குப் பிறகு, சோனகர்களாகிய நாம், சிங்களவரைத் தவிர்ந்த ஏனைய சமூகங்களினால், எவ் வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ப தைக் கூற கடமைப்பட்டுள்ளேன். தமிழ் சமூகத்திற்குத் ஆறுதல் கூறும் வகையில் தான் நான் இச்சொற்பொழிவை ஆற்றுகி றேன். எங்களுடைய பிரதிநிதித்துவம், இல்லாமலேயே எங்களைப் பற்றிய குறிப்பு கள் கூறப்பட்டிருக்கின்றன. சோனகர்கள் தமிழ் பேசும் மக்களாகையால், தமிழர்கள் எம்மைப் பிரதிநிதித்துவப் படுத்தலாம், என்று ஒரு கால கட்டத்தில் கூறப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு நிலைக்கும், நாம் தலை வணங்க வேண்டியிருந்தது||
மேலும் கூறுகையில்
என்று சேர் ராஸிக் பரீத் கூறினார். மேலும் அவர் பின்வருமாறு கூறினார்.
ஷஷநாங்கள் பல துயரங்களை அனுப வித்திருக்கிறோம். சோனர்களாகிய நாம் பட்ட கஷ்டங்களில் பத்தில் ஒரு பங்காவது நீங்கள் அனுபவிக்கவில்லை. சிறுபான்மை யின அரசாங்கத்தின் நிபந்தனை, புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டு மென்பதேயாகும்.
டொமினியன் அந்தஸ்தை வேண்டி நிற்கும் சிங்கள மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைக்கு நாம் பக்கபலமாக இருக்கி றோம். எனவே, சிங்களவர் தமிழர் சோன கர் ஆகிய நாம் எல்லோரும், டொமினியன் அந்தஸ்தை நோக்கி முன்னேறி பிரித்தானிய காமன் வெல்த் நாடுகளின் சங்கத்தில் ஓர் அங்கத்தவராக, எமது தாய் திருநாடாம் இலங்கையை பெருமையுடன் வீற்றிருக்கச் செய்வோமாக|| என்று சேர் ராஸிக் பரீத் பேசி முடித்தார்.
நன்றி: முஹம்மத் சமீம் எழுதிய இலங்கை சிறுபான்மை சமூகத்தின் பிரச்சனைகள் நூல்.)

No comments:

Post a Comment